எஸ்.சபேசன்

சுவிஸ் உதயம் அமைப்பின் தாய்ச்சங்கத்தின்  செயற்குழுக்கூட்டம் சுவிஸ் நாட்டில் சுவிஸ் உதயம் அமைப்பின் அலுவலகத்தில் தலைவர் டி.எல்.சுதர்சன் தலைமையில் சுவிஸ் நாட்டில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. .

இக்கூட்டத்தின்போது எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெற இருக்கின்ற சுவிஸ் உதயம் அமைப்பினுடைய ஆண்டுவிழா தொடர்பாக பல தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டிருந்ததுடன் கடந்த வருடத்திற்கான வரவு செலவு அறிக்கையினை பொருளாளர் சமூகசேவகர் க.துரைநாயகத்தினால் சமர்ப்பிக்கப் பட்டிருந்ததுடன் அதனை சபையோர்கள் ஏகமனதாக ஏற்றுக்கொண்டனர் 

இந்நிகழ்வில் அமைப்பின் செயலாளர் அம்பலவாணர் ராஜன் பொருளாளர் சமூகசேவகர் க.துரைநாயகம் உதவிச் செயலாளர் சுபாஸ்கோ உதவித்தலைவர் கா.தியாகராஜா உதவிப்பொருளாளர் வி.பேரின்பராஜா நிருவாக உறுப்பினதர்களான தர்மபாலன் சி.வரதராஜன் க.கஜேந்திரன் பி.ஜெயதரன் எம்.ரவீந்திரன் எஸ்.பரமேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.






Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours