எஸ்.சபேசன்

சம்மாந்துறை கல்விவலயத்திற்குட்பட்ட மத்தியமுகாம் அகத்தியர் வித்தியாலயத்தின் அதிபர் சாமித்தம்பி சிதம்பரப்பிள்ளை அவர்கள் தனது 34 வருட கல்விச்சேவையில் இருந்து ஓய்வுபெற்றுச் செல்வதனை முன்னிட்டு பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு 3 ஆம் திகதி புதன்கிழமை பதில் அதிபர் மு.ஜெயசுந்தரம் தலைமையில் இடம்பெற்றது.

கடந்த பலவருடங்களாக இப்பிரதேசத்தின்; கல்விவளர்ச்சிக்காக அளப்பரிய தொண்டாற்றிய அதிபர் சிதம்பரப்பிள்ளை அவர்களை அப்பாடசாலையின் ஆசிரியர்கள் பெற்றோர்கள் பொது அமைப்புக்கள் பழையமாணவர்கள் ஒன்றிணைந்து இப்பாராட்டுவிழாவினைச் செய்துள்ளனர்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்பாளர் எஸ்.மகேந்திரகுமார்,சிறப்பு அதிதிகளாக ஆசிரிய ஆலோசகர்களான கே.அற்புதராஜா,சா.மோகன் மற்றும் அயல்பாடசாலைகளின் அதிபர்கள் உட்பட பலர் கலந்து சிறப்பித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது







Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours