ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைச் செயலகமாகிய ஸ்ரீ கொத்தாவிலிருந்து கருணா அம்மனுக்கு விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று தமிழர் ஐக்கிய சுதந்திர முன்ணனியின் தலைவர் கருணா அம்மான் தலைமையிலான குழுவினர் ஸ்ரீ கொத்தாவிற்கு சென்று ஐக்கிய தேசிய கட்சியின் உயர் மட்ட குழுவுடன் விசேட சந்திப்பொன்றினை மேற்கொண்டு கலந்துரையாடலில் ஈடுபட்டதாக கட்சியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த கலந்துரையாடலில் கட்சியின் உப தலைவர் ஜெயசரவணா, செயலாளர் செந்தூரன் தெய்வநாயகம் உள்ளிட்ட குழுவினர் பங்கேற்றிருந்ததுடன், இதன் போது விசேடமாக எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக கலந்துரையாடல்கள் இடம் பெற்றதுடன், இதன் போது பல இணக்கப்பாடுகள் எட்டப்பட்டு கலந்துரையாடல் நிறைவு பெற்றுள்ளது.
முன்னால் அமைச்சர் அகிலவிராச் காரியவசம் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியின் உயர் மட்ட குழுவினர் குறித்த விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours