நூருல் ஹுதா உமர்

முன்னாள் இராஜாங்க அமைச்சரும், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவர் சட்டத்தரணி எச்.எம். முகம்மட் ஹரீஸ் அவர்களின் முயற்சியின் பயனாக ஜனாதிபதியின் விசேட நிதி ஒதுக்கீட்டில் சம்மாந்துறை கல்வி வலய கமு/சது/ அல்- அஸ்ரப் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) சுற்றுமதில் நிர்மாணிக்க 02 மில்லியன் ரூபாய் நிதியில் புனரமைக்கும் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.


கமு/சது/ அல்- அஸ்ரப் மத்திய கல்லூரி அதிபர் எம். ஐ.எம்.மாஹீர், தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு முன்னாள் இராஜாங்க அமைச்சரும், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவர் சட்டத்தரணி எச்.எம். முகம்மட் ஹரீஸ் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சுற்றுமதில் அரங்கு அமைக்கும் பணியை அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் இறக்காமம் பிரதேச சபை முன்னாள் தவிசாளர் எம். ஜமீல் காரியப்பர், பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் எம்.எல். முஸ்னி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளர் எஸ்.எல்  நிஷார், பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் நௌபர் ஏ பாவா, வெகுஜன மக்கள் தொடர்பாடல் செயலாளர் யூ.எல்.என். ஹுதா உமர், சிரேஷ்ட ஆலோசகர் எம்.ஏ. கலீல் ரஹ்மான், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர், பழைய மாணவர்கள் சங்கத்தினர், பாடசாலை பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours