மாளிகைக்காடு செய்தியாளர்

கல்முனை தொடக்கம் மருதமுனை வரையிலான கடற்கரை வீதி காபட் வீதியாக புனரமைப்பு செய்யும் ஆரம்ப வேலைத்திட்டம் கல்முனை கடற்கரை பள்ளிவாசல் அருகில் இன்று (13) நடைபெற்றது. முன்னாள் இராஜாங்க அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களின் கோரிக்கைக்கு அமைய ஜனாதிபதியின் விசேட நிதி ஒதுக்கீட்டின் மூலம் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களின் டி- 100 வேலை திட்டத்தினூடாக இவ் வீதி 125 மில்லியன் நிதியில் இதன் முதற்கட்டமாக 65 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் அபிவிருத்தி செய்யப்பட்டவுள்ளது.


கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் எம்.ஏ.கலீல் ரஹ்மான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்களை ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்று பொறியியலாளர் இசட்.ஏ.எம் அஸ்மீர், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம காரியாலய பொறியியலாளர் எம்.ஐ.எம் றியாஸ், கல்முனை மாநகர சபை பொறியியலாளர் ஏ.ஜே அப்துல் ஹலீம் ஜெளஸி, கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர்களான ஏ.ஆர்.அமீர், எம்.ஐ.எம் பிர்தௌஸ், ஏ.ஏ.பஷீர், எம்.எஸ்.எம் நவாஸ், காரைதீவு பிரதேச சபை முன்னாள் உறுப்பினர்களான எம்.என்.எம். ரணீஸ், எம்.எச்.எம்.இஸ்மாயில் பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் நௌபர் ஏ பாவா, பாராளுமன்ற உறுப்பினரின்  இணைப்பாளர்கள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் மத்திய குழுவினர், வட்டார அமைப்பாளர்கள், பள்ளிவாசல்களின் நிர்வாகிகள், பாடசாலைகளின் அதிபர்கள், வர்த்தகர்கள், பொதுமக்கள் ,பிரதேச முக்கியஸ்தர்கள், விளையாட்டு கழகங்களின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours