பாறுக் ஷிஹான்
குறித்த மருத்துவ உபகரணங்கள் மற்றும் தளபாடங்களை உரிய வைத்தியசாலைகளுக்கு கையளிக்கும் நிகழ்வு இன்று (04) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் பிராந்தியப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது சம்மாந்துறை, நிந்தவூர், திருக்கோவில் ஆகிய ஆதார வைத்தியசாலைகள் மற்றும் பனங்காடு ஒலுவில், அன்னமலை, இறக்காமம் ஆகிய பிரதேச வைத்தியசாலைகளுக்கும் குறித்த உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிராந்திய பிரிவு தலைவர்கள், சம்மாந்துறை, நிந்தவூர், திருக்கோவில் ஆதார வைத்தியசாலைகளின் வைத்திய அத்தியட்சகர்கள், பிரதேச வைத்தியசாலைகளின் பொறுப்பு வைத்திய அதிகாரிகள், பணிமனையின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours