( வி.ரி. சகாதேவராஜா)
மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை விவசாய விரிவாக்கல் நிலையத்திற்குட்பட்ட மாவடிமுன்மாரி கிராமத்தில் புதிய தொழில்நுட்பங்களுடன் செய்கை பண்ணப்பட்ட நெற்செய்கையின் அறுவடை விழா நேற்று முன்தினம் இடம்பெற்றது. 

மாவடிமுன்மாரி விவசாய போதனாசிரியர் பிரிவிற்கு பொறுப்பான தொழில்நுட்ப உத்தியோகத்தர் துஷாந் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தெற்கு வலய உதவி விவசாய பணிப்பாளர் திருமதி நித்தியா நவரூபன் பாடவிதான உத்தியோகத்தர்களான  லாவண்யா செந்தீபன், லக்ஷ்மன், இளமாறன், தெற்கு வலய விவசாய போதனாசிரியர்கள் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது பரசூட் முறை, இயந்திர நாற்று நடுகை மற்றும் வீசி விதைத்தல் ஆகிய மூன்று முறைகளிலும் செய்கை பண்ணப்பட்ட நெற்செய்கை அறுவடையின் பின் பயிர்வெட்டு அளவீடு செய்யப்பட்டது. வீசிவிதைத்தலை விடவும் ஏனைய இரு முறைகளிலும் அதிக விளைச்சல் கிடைத்ததோடு உற்பத்தி செலவும் குறைவாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.  

மட்டக்களப்பு மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் எம்.பரமேஸ்வரனின் வழிகாட்டலில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல இடங்களிலும் இவ்வாறான முன்மாதிரி துண்டச்செய்கைகள் செய்கை பண்ணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours