.
திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் பிரதி வெள்ளிக்கிழமை தோறும் என்பு முறிவு கிளினிக் நடாத்தப்படவுள்ளது.
கல்முனை
ஆதார வைத்தியசாலையில் பணியாற்றும் என்பு முறிவு சத்திர சிகிச்சை நிபுணர்
டாக்டர் எஸ்.கலாவேந்தன், வைத்தியசாலை அபிவிருத்தி குழுவினரும் நிருவாகமும்
கேட்டுக் கொண்டதற்கிணங்க இக் கிளினிக்கை நடாத்த முன்வந்துள்ளார்.
அதன் முதலாவது கிளினிக் எதிர்வரும் 26 ஆம் தேதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு நடைபெறும்.
அக்கரைப்பற்று
தொடக்கம் பொத்துவில் வரையிலான பெருநிலப்பரப்பில் வாழும் மக்களின் நன்மை
கருதி திருக்கோவில் ஆதார வைத்திய சாலையில் என்பு முறிவு கிளினிக்
ஆரம்பித்து வைக்க உள்ளார்,
ஒவ்வொரு
வெள்ளிக்கிழமையும் நோயாளிகள் சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியும் என்பதை,
திருக்கோவில் பிரதேச பொது மக்களுக்கு வைத்தியசாலை நிருவாகம்
அறிவித்துள்ளது.
Post A Comment:
0 comments so far,add yours