எஸ்.சபேசன்
சம்மாந்துறை கல்விவலயத்திற்குட்பட்ட வேப்பையடி கலைமகள் மகாவித்தியாலயத்தின் வகுப்பறைகளை பேசும் வகுப்பறைகளாக மாற்றுவதற்கான நிதி உதவியினை நாவிதன்வெளியினைச் சேர்ந்த லண்டனில் வசிக்கும் காந்தி அவர்களின் புதல்வர் துரை அவர்களால் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு திங்கட்கிழமை அதிபர் கே.தியாகராஜா தலைமையில் இடம்பெற்றது.மாணவர்களின் கற்றல் செயற்பாட்டிற்கு உதவும் வகையில் 2 இலட்சம் செலவில் வகுப்பறைகளை அழகுபடுத்தும் வேலைகளை ஆரம்பித்து வைத்ததுடன் அவரது சேவையினைப் பாராட்டி பாடசாலையின் அதிபர் மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்களால் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours