.
ஜனாதிபதி தேர்தல் இந்த நாட்டினுடைய தலையெழுத்தை தீர்மானிக்கின்ற தேர்தல். இந்த நாட்டை வளர்ச்சி அடைய செய்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்று சிந்திக்கின்ற கடமை நாட்டு மக்களுக்கு இருக்கிறது. பல பட்டதாரிகள் பட்டம் பெற்று நாட்டை முன்னேற்றும் அறிவாற்றலுடன் வெளிவருகின்ற போதும் அவர்களுக்கான தொழில் வாய்ப்பை கொடுக்க முடியாத நிலையில் இந்த நாடு இருக்கிறது. ஆனால் அதிக வளம் நிறைந்த நாடு இலங்கை. மட்டுமின்றி அதிக கோடீஸ்வரர்களின் கவனத்தை ஈர்த்த நாடாகவும் இலங்கை இருக்கிறது என முன்னாள் இராஜாங்க அமைச்சரும், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவர் சட்டத்தரணி எச்.எம். முகம்மட் ஹரீஸ் தெரிவித்தார்.
ஒலுவில் பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய அவர், அங்கு தொடர்ந்தும் உரையாற்றும் போது,
ஹெலான் மாஸ்காக இருக்கட்டும் அல்லது இந்திய பெரும் தொழிலதிபர்களாக இருக்கட்டும். இந்த நாட்டினுடைய பட்ஜெட் என்பது அவர்களின் ஒரு நிறுவனத்தினுடைய பட்ஜெட்டை விட குறைவு. கொக்கோகோலா நிறுவனமோ டொயோட்டா நிறுவனமோ அல்லது ஹெலான் மாஸ்கின்னுடைய நிறுவனமாக இருந்தாலும் அவர்களுடைய ஒரு வருட பட்ஜெட்டை விட குறைவாகத்தான் இலங்கை நாட்டினுடைய பட்ஜெட் இருக்கிறது. 14 பில்லியன் அமெரிக்க டாலர் என்பது பணக்காரர் அம்பானி உடைய ஒரு வருட பட்ஜெட்டை விட குறைவு
எமது நாட்டின் முகாமைத்துவத்தில் ஏற்பட்ட பிழை தான் நாட்டின் இன்றைய நிலைக்கு காரணம். குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச இருக்கின்ற போது குரங்கின் கையில் பூமாலை கிடைத்தது போல இந்த நாட்டை மோசமாக்கி விட்டார். இந்த நாடு இப்போது பத்து வருடம் பின்னோக்கி தள்ளப்பட்டு இருக்கிறது. காரணம் பெரும்பான்மை சிங்களவர்கள் அவருக்கு அளித்த வாக்கே காரணம். ஆதலால் நாட்டு மக்கள் இன்னும் ஒரு தடவை நாட்டை பின்னோக்கி செல்ல விடாது இந்த நாட்டை வளர்ச்சி அடைய செய்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்று சிந்தித்து செயல்படுங்கள் என்றார்.
Post A Comment:
0 comments so far,add yours