( எமது நிருபர் )
சம்மாந்துறை
வலயத்தில் 25 வருடங்களுக்கு மேலாக சேவையாற்றி வெள்ளி விழாக் கண்ட ஒரே ஒரு
உதவிக் கல்விப் பணிப்பாளரும், சம்மாந்துறை வலய கல்வி சார் உத்தியோகத்தர்கள்
நலன்புரி ஒன்றியத்தின் தலைவருமான விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா பொன்னாடை
போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
சம்மாந்துறை
வலய ஆரம்பக் கல்வி ஆசிரியர்கள் வட்டம் நடாத்திய சேவை நலன்பாராட்டு
விழாவும் கல்வி சாதனையாளர்கள் கௌரவிப்பு விழாவும் சம்மாந்துறை அப்துல்
மஜீத் மண்டபத்தில் நேற்று முன்தினம் சிறப்பாக நடைபெற்ற போதே இச்சிறப்பு
கௌரவிப்பு இடம் பெற்றது.
காரைதீவைச்
சேர்ந்த இவர் பத்து வருடங்கள் காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியில்
ஆசிரியராகவும் சம்மாந்துறை வலயக்கல்விப் பணிமனையில் 26 வருடங்கள் உதவிக்
கல்விப் பணிப்பாளராகவும் சேவையாற்றியுள்ளார் .
சம்மாந்துறை
வலயம் உருவாக்கப்பட்ட காலம் தொடக்கம் இதுவரை 25 வருடங்களுக்கு மேலாக
உதவிக் கல்விப் பணிப்பாளராக சேவையாற்றிவரும் வி.ரி. சகாதேவராஜா இன்னும் இரு
மாதங்களில் ஓய்வு பெறவுள்ள நிலையில் இக் கௌரவிப்பு இடம் பெறுவது
மகிழ்ச்சியளிக்கிறது. முன்னணி சமூக செயற்பாட்டாளரான அவர் ஒரு தலைசிறந்த
ஊடகவியலாளரும் கூட. அவரை நன்றியோடு எமது சம்மாந்துறை மண் பார்க்கிறது என
விழா ஒருங்கிணைப்பாளர் ஆசிரிய ஆலோசகர் றிஸ்வி ஸெயின் தெரிவித்தார்.
Post A Comment:
0 comments so far,add yours