மட்டக்களப்பு திக்கோடை கணேசா மகா வித்தியாலயத்தின் கணிதப் பூங்கா திறப்பு விழாவும் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டு போட்டியும் வித்தியாலய அதிபர் ஆ.நித்தியானந்தம் தலைமையில் 17.07.2024.நேற்று முன்தினம் நடை பெற்றது.
மாகாண
கல்வி திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் ஜெம் திட்டத்தின்
கீழ் கணிதப் பாடத்தினை செயற்பாட்டு கல்வியினூடாக மாணவர்களை விரும்பி
கற்பனை ஊக்குவிக்கும் முகமாக அமையப் பெற்ற கணிதப் பூங்காவே இதன்போது
திறந்து வைக்கப்பட்டது.
இத்
திறப்பு விழாவினைத் தொடர்ந்து வருடாந்த இல்ல விளையாட்டு போட்டியானது
ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்றது. கங்கா,யமுனா,காவேரி என்னும் நாமத்துடன்
இல்லங்கள் பிரிக்கப்பட்டு குறித்த இல்ல விளையாட்டு போட்டியானது
நடைபெற்றிருந்தது. இதன்போது 280 புள்ளிகளைப் பெற்று காவேரி இல்லம்
முதலாமியத்தினையும் 267 புள்ளிகளைப் பெற்று யமுனை இல்லம்
இரண்டாமிடத்தினையும் 250 புள்ளிகளைப் பெற்று கங்கை இல்லம்
மூன்றாமிடத்தினையும் பெற்றுக் கொண்டது.
இந் நிகழ்வில்
பிரதம அதிதியாக பட்டிருப்பு கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப்
பணிப்பாளர்களான ,பு.திவிதரன், மற்றும் தட்சணாமூர்த்தி, ஆகியோர் சிறப்பு
அதிதியாகவும, உதவிக் கல்விப் பணிப்பாளர்திருச்செல்வமு போரதீவுப்பற்று
கோட்டக்கல்வி பணிப்பாளர் க. அருள்ராசா உகியோனர் கௌரவ அதிகமாகவும், சகோதர
பாடசாலையின் அதிபர்கள்,பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர், பழைய மாணவர்
சங்கத்தினர் என பலரும் கலந்து கொண்டனர்........பழுகாமம் நிருபர்
Post A Comment:
0 comments so far,add yours