(அஸ்ஹர் இப்றாஹிம்)


கல்முனையை பிறப்பிடமாகவும் பெரிய நீலாவணையை வசிப்பிடமாகவும் கொண்ட நவீன இலக்கிய வளர்ச்சியில் கிழக்கிலங்கையின் புகழ் பூத்த கவிஞர்களுள் ஒருவராக  விளங்கிய ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளர், கவிஞர், கலாபூஷணம் மு.சடாட்சரன் இன்று தனது 84 ஆவது வயதில் காலமானார்.

ஈழத்து கலை இலக்கிய பரப்பில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் மூத்த கவிஞர் மு.சடாட்சரன்.

அனைவரது பாராட்டையும் பெற்றவர்.  கிழக்கின் கவிச்சக்கரவர்த்தியாக திகழ்ந்த மறைந்த கவிஞர் நீலாவணனின் பேரன்புக்கு பாத்திரமானவர்.

தனது வாழ்நாளில் பெரும் பகுதியை எழுத்து  மற்றும் கலை இலக்கிய துறைக்காக அர்ப்பணித்தவர். இன்னும் இரு நூல்களை வெளியிட வேண்டும் என முனைப்புடன் செயற்பட்டுவந்தவர்.  அன்னாரின் இழப்பு ஈழத்து கலை இலக்கிய பரப்பில் பெரும் வெற்றிடத்தை விட்டுச் சென்றுள்ளது.

முஸ்லிம் மாணவர்களுக்கும் தனது கல்வி சென்றடைய வேண்டும் என்பதற்காக கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரியில் உயர்தர மாணவர்களுக்கு ஆசிரியராக பணியாற்றியமை மறக்க முடியாத அனுபவமாகவுள்ளது.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours