மறைந்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழரசு கட்சியின் முன்னாள் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தாயக தலைமகன் இரா.சம்பந்தன் ஐயாவின் புகழுடல்  அஞ்சலிக்காக இன்றுபாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில். வைக்கப்பட்டிருந்தது.
இன்று , பிரதமந்திரி தினேஷ்குணவத்தன, சபாநாயகர் , முன்னாள் ஜனாதிபதி , அமைச்சர்கள்,  ஆளுநர்கள், கட்சித்தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டுத் தூதுவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியதுடன்  அம்பாரைமாவட்டம் சார்பாக தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் தலைமையிலான குழுவினர்களான கல்முனை மாநகரசபை உறுப்பினர்   சந்திரசேகரம் ராஜன் கல்முனைத் தொகுதி தமிழரசுக்கட்சியின் தலைவர் ஆ;.நிதான்சன் உட்பட பலர் அங்கு சென்று அஞ்சலி செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 










Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours