(எம்.எம். றம்ஸீன்)


அக்கரைப்பற்று கல்வி வலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட உயர்தர கணித, விஞ்ஞானப்பிரிவு மாணவர்களின் பௌதீகவியல் செய்முறை  கருத்தரங்கு ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலயத்தில் பாடசாலையின் அதிபர் அஷ் ஷெய்க் யூ.கே. அப்துர் ரஹீம் (நளிமி) தலைமையில்  அண்மையில் ஆரம்பமானது.

இவ்வாரம்ப நிகழ்வில் பிரதம அதிதியாக அக்கரைப்பற்று வலையக் கல்விப்பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.எம். ரஹ்மத்துல்லா, கௌரவ அதிதிகளாக அக்கரைப்பற்று வலைய பிரதிக்கல்விப்பணிப்பாளர்களான திருமதி எம்.எம்.சித்தி பாத்திமா, திருமதி பி(B).ஜிஹானா, ஏ.எல்.ஏ.மஜீட் மற்றும் விஞ்ஞானப்பாட உதவிக் கல்விப்பணிப்பாளர் எம்.என்.எம்.மஸீன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

இதேவேளை, பாடசாலைக்கு திடீர் விஜயமொன்றினை மேற்கொண்ட கிழக்கு மாகாணக் கல்விப்பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திரகுமார் செய்முறை  கூடத்தைத் திறந்து வைத்து பார்வையிட்டதுடன், மாணவர்களின் முயற்சியினையும் பாராட்டினார். 

மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வு மூலமாக எதிர்காலத்தில் இப்பாடசாலை மற்றும்  அக்கரைப்பற்று வலய பாடசாலை மாணவர்களின் அடைவு மட்டம் மேம்படுமென்றும் அதற்காக வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

இப்பகுதிகளில் செய்முறை  கருத்தரங்கில் மாணவர்களின் துறைசார்ந்த பரிசோதனைகள் கூடம் அதிதிகளால் திறந்து வைக்கப்பட்டதுடன், ஒவ்வொரு பரிசோதனை முறைகள் தொடர்பாகவும் மாணவர்களால் அதிதிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்க விடயமாகும்.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours