( வி.ரி.சகாதேவராஜா)
நாவிதன்வெளி பிரதேச சபைக்கு உட்பட்ட பிரதேசத்தில்  போசாக்கு குறைந்த கர்ப்பிணித்தாய்மார்கள் மற்றும் சிறுவர்களுக்கான போசாக்கு பொதி வழங்கும் நிகழ்வு இன்று (25)வியாழக்கிழமை நாவிதன்வெளி பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது.

நாவிதன்வெளி பிரதேச சபை செயலாளர்பா. சதீஷ்கரன் தலைமையில் நடைபெற்ற
நிகழ்வில் பிரதம அதிதியாக நாவிதன்வெளி பிரதேச  சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம். பாயிஸ் கலந்து சிறப்பித்தார்.

 கௌரவ அதிதியாக பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் அ. சுதர்சன் மற்றும் சவளக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் பிரதேச சபை உத்தியோகத்தர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.

 நிகழ்வில் சுமார் ஐந்து லட்சம் ரூபாய் பெறுமதியான  பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டு தேர்வு செய்யப்பட்ட 100 பயனாளிகளுக்கு தலா 5000 ரூபாய் பெறுமதியான உலருணவுப் பொதிகள் வழங்கப்பட்டது.

நாவிதன்வெளி பிரதேச சபையின் 2024 ஆம் ஆண்டுக்கான நலன்புரி வேலைத்திட்டத்தின் கீழ்  இச்சமூக சேவை பொதி வழங்கி வைக்கப்பட்டது என்று சபையின் நிதிப் பொறுப்பு உத்தியோகத்தர் மு.ரகுநந்தன் தெரிவித்தார். 







Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours