சாய்ந்தமருது
ஜீனியஸ் 7 இளைஞர் விருதுப்பிரிவு ஊடாக கிழக்கு மாகாணத்தை சேர்ந்த 36
இளைஞர் யுவதிகள் வெண்கலம் மற்றும் வெள்ளி விருதுக்கு தெரிவு
செய்யப்பட்டுள்ளனர்.
சாய்ந்தமருது,கல்முனை,
சம்மாந்துறை,நிந்தவூர்,பொத்துவி ல்,
மத்தியமுகாம்,ஓட்டமாவடி போன்ற பிரதேசத்தை சேர்ந்தவர்களே இவ் விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையில்
இவ் விருதுக்கு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தேசிய விருதுப் பிரிவு
ஊடக தெரிவு செய்யப்பட்ட இளைஞர் யுவதிகளுக்கான இச் சர்வதேச விருது வழங்கும்
விழாவிக்கு பிரதம அதிதியாக இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அதிமேதகு
அன்ட்ரூ பெட்ரிக், மற்றும் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார இராஜாங்க
அமைச்சர், ரோஹன திஸாநாயக்க
ஏற்பாட்டில், தேசிய
இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர்/பணிப்பாளர் நாயகமும் தேசிய இளைஞர் விருது
தேசிய பணிப்பாளருமான பொறியியளார் பசிந்து குணரத்ன தலைமையில் நடைபெறும் இவ்
விழாவில் 36 இளைஞர் யுவதிகள் 17 வெள்ளி விருதுகளையும் 19 வெங்கல
விருதுகளையும் பெறவுள்ளனர்.
இந்த
சர்வேதச இளைஞர் விருது வழங்கல் விழாவில் அமைச்சர்கள், பாராளுமன்ற
உறுப்பினர்கள், இராஜதந்திரிகள்,பிரித்தானிய எடின்பரோ சர்வதேச விருது
குழுவினர்கள் மற்றும் வெளிநாட்டு தூதரவளர்களின் பங்கேற்புடன் 2024 ஆகஸ்ட்
12ம் திகதி (திங்கள்) மு.ப 8.30 மணிக்கு “தலைமைக் காரியாலயம் மஹரக - தேசிய
இளைஞர் சேவைகள் மன்றத்தின் பிரதான கேட்போர் கூடத்தில்” இடம்பெறவுள்ளது.
இவ்விருதானது
13-24 வயது உட்பட்ட இளைஞர் யுவதிகளின் ஆளுமை,நுண்ணறிவு, வெளிக்கள ஆய்வு,
தலைமைத்துவம், ஆற்றல், கல்வி, திறமை, விளையாட்டு ,சர்வதேச தொடர்புகளுடைய
இளைஞர் யுவதிகளுக்கு வழங்கப்படுகின்ற ஓர் சர்வதேச விருதாகும்.
இந்த சர்வதேச விருதின் ஊடாக,
1. உள்நாட்டு அரச பல்கலைகழக அனுமதியின் போது விசேஷட புள்ளிகள் (கல்வியியற் கல்லூரி/பல்கலைகழகம்)
2. தேசிய மற்றும் சர்வதேச அங்கீகாரம்
3. தொழில்முறை மற்றும் நெறிசார் விருத்தி
4. உள மற்றும் உடலியல் விருத்தி
5. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிகழ்வுகளில் கலந்து கொள்ளவதற்கான வாய்ப்பினை பெற முடியும்.
இவ்
விருதினை பெற்றவுள்ள இளைஞர் யுவதிகளை நெறிப்படுத்தி அவர்களை
ஊக்கப்படுத்திய முன்னாள் அம்பாறை மாவட்ட இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும்
எடின்பரோ கோமகன் சர்வதேச விருதுன் ஜீனியஸ் 7 விருதுப் பிரிவின் தலைவரும்
இளைஞர் செயற்பாட்டாளருமான முஹம்மட் ஸாஜீத் ஸமான் இதற்கான பல்வேறு
முயற்சிகளை மேற்கொண்டு, இவர் தனது 16 வயதிலிருந்து இவ்வாறான பல தேசிய
மற்றும் சர்வதேச ரீதியில் இளைஞர் வேலைத்திட்டங்களை மேற்கொள்வதுடன்
தலைமைத்துவம்,
இளைஞர் பரிமாற்று வேலைத்திட்டம்,
முயற்சியாண்மை அபிவிருத்தி,சமூக விழிப்புணர்வூட்டல் என்ற பல நிகழ்சியில் கலந்து கொண்டவருமார்.
நூகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் புலன் விசாரணை அதிகாரியாக கடமையாற்றுகின்ற இவர்,
கடந்த
2013 தொடக்கம் 2024 வரை இவரது தலைமையில் சிறந்த வழிகாட்டல் ஊடாக கிழக்கு
மாகாணத்தில் ஆகக் கூடுதலான 102க்கு மேற்பட்ட இளைஞர் யுவதிகள் வெள்ளி
மற்றும் வெண்கல விருதுகளை பெற்றுக் கொண்டது ஒரு சாதனை என்பதும்
குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours