மட்டக்களப்பு மாவட்ட சிவில் பிரஜைகள் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் வி.திருநாவுக்கரசு அவர்களின் ஏற்பாட்டில் சிங்கள டிப்ளோமா பாடத்திட்டத்தில் தகைமை பெற்ற 350 மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று  (31) திகதி சந்திவெளி கலாசார மண்டபத்தில் காலை 9.30 மணி முதல் மதியம் 01.00 மணி வரை நடைபெற்றது.



கிழக்கு கட்டளை தளபதி எஸ்.ஏ.குலதுங்க அவர்கள் இவ் விழாவின் பிரதம விருந்தினராக  கலந்து கொண்டார். 

மேலும் இந்நிகழ்வில் 23 படைப்பிரிவின் தளபதி, பிரதேச செயலாளர்கள், சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் கௌரவ அதிதிகளாக கலந்து கொண்டனர். 

இந்நிகழ்வில் வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ் ஸ்ரீ தரன் கலந்துகொண்டு "மொழியின் மூலம் ஒற்றுமை" என்ற தொனிப்பொருளில் இளைஞர்களுக்கு மொழியின் முக்கியத்துவம் குறித்து  விரிவுரை ஆற்றியிருந்தார். 

மேலும் விழாவின் முக்கியத்துவம் மற்றும் சமுதாயத்தில் ஒரு மொழியின் பணி மற்றும் மோதல்களை சரியான தொடர்பு மூலம் எவ்வாறு தீர்க்கலாம் என்பது குறித்து கிழக்கு தளபதி அர்த்தமுள்ள உரையை நிகழ்த்தினார். 

இதன்போது, ​​மட்டக்களப்பு மாவட்ட சிவில் ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதம செயலாளரும் பயிற்சி ஆலோசகருமான ஹயாது மொஹமட் அன்வர் கிழக்கு கட்டளைத் தளபதியினால் பாராட்டப்பட்டார். 

மேலும், நிகழ்வில், கிழக்குப் பாதுகாப்பு படைத் தளபதி கருத்துத் தெரிவிக்கையில், சிங்களம் பேசும் மாணவர்கள் மற்றும் அரச அதிகாரிகள் தமிழ் மொழியைக் கற்கும் வாய்ப்பை உருவாக்குவது தனது நம்பிக்கையினை தெரிவித்தார்.







Share To:

Thaayman

Post A Comment:

0 comments so far,add yours