( வி.ரி. சகாதேவராஜா)
கிழக்கு மாகாணத்தில் வீதி விபத்துகளை குறைத்தல் தொடர்பான விழிப்புணர்வுச் செயலமர்வு மட்டக்களப்பில் நடைபெற்றது.
சுகாதார
அமைச்சினது காயம் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகின் (Injury
Prevention & Control Unit) கிழக்கு மாகாணத்திற்கான மீளாய்வுக் கூட்டம்
மட்டக்களப்பில் இடம்பெற்றது.
கிழக்குமாகாண
வைத்தியசாலைகள் மற்றும் மட்டக்களப்பு, திருகோணமலை, கல்முனை, அம்பாறை
பிராந்தியங்களின் சுகாதார பணிப்பாளர் பணிமனை அதிகாரிகள் கலந்து பங்குபற்றிய
இவ் மீளாய்வுக்கூட்டமானது புதன்கிழமையன்று மட்டக்களப்பு பிராந்திய
சுகாதார சேவைகள் பணிமனையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
வரவேற்புரை நிகழ்த்திய மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி இரா. முரளீஸ்வரன் ..
வீதி
விபத்துக்கள் மற்றும் காயங்கள் பற்றியமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
மற்றும் பொதுமக்களுக்கான விழிப்புணர்வுகளை விரிவுபடுத்தல் போன்ற
செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுப்பதன் மூலம் வீதி விபத்துக்களை
குறைப்பதுடன், சுகாதார சேவைகளுக்கான நிதி மற்றும் வேலைப்பழுவினை
கட்டுப்படுத்த முடியும்
என்றார்.
இதை தொற்றா நோய்களுக்கான மட்டக்களப்பு பிராந்திய வைத்திய அதிகாரி டாக்டர் இ.உதயகுமார் ஒருங்கிணைத்து நடத்தினார்.
காயத்தடுப்பு
நிகழ்ச்சித்திட்டம் பற்றிய தேசிய நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் வைத்தியக்
கலாநிதி சமிதா சிறிதுங்க கிழக்கு மாகாண வைத்தியசாலைகள் காயம் தடுப்பு
சிகிச்சைகளில் பங்களிக்கும் விதம் மற்றும் தரவு நுளைவு அறிக்கைள்
போன்றவற்றை விபரித்திருந்தார்.
தொடரந்து,
மாகாண வைத்திய சாலைகள் தங்களது தங்களின் தரவுகள் அடிப்படையிலான
செய்ற்பாடுகளையும் முன்வைத்து விபரிப்புக்களை
மேற்கொடிருந்தனர்.சுகாதாரத்துறை யுடன் ஏனையபோலீஸ் வீதி அபிவிருத்தி
அதிகாரசபை மாநகரசபை பாசசாலைகள் ஏனைய அரசு சாரா நிறுவனங்களின் பங்களிப்பை
பெற்றுக்கொள்ளல் வீதி விபத்து அதிகம் நடைபெறும் இடங்களை கண்காணித்து கூடிய
கவனம் செலுத்தல் என்பன பற்றியும் திட்டமிடப்பட்டது
Post A Comment:
0 comments so far,add yours