சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்கு மாகாணக் கிளையின் விஷேட நிர்வாக சபைக்கூட்டம் அமைப்பின் தலைவர் ஓய்வுநிலை பிரதிக்கல்விப்பணிப்பாளர் மு.விமலநாதன் தலைமையில் அமைப்பின் உப காரியாலயமான பெரியபோரதீவு எரிபொருள் நிரப்பு நிலைய கட்டிட தொகுதியில் (07.08.2024) புதன்கிழமை இடம்பெற்றது.
இதன் போது சுவிஸ் நாட்டிலிருந்து வருகை தந்த அமைப்பின் தாய்ச்சங்கப் பொருளாளர் சமூக சேவகரும் பிரபல தொழிலதிபருமான க.துரைநாயகம் அவரது பாரியார் திருமதி நிதிவதனி துரைநாயகம், தாய்ச்சங்க நிருவாக சபை உறுப்பினர் வண்ணண் சோமசுந்தரம் , அமைப்பின் ஆலோசகர் பாவாணர் அக்கரைப்பாக்கியன் ,செயலாளர் றொமிலா செங்கமலன் ,பொருளாளர் கருஸ், பிரதித்தலைவர் ஓய்வுநிலை உதவிக்கல்விப்பணிப்பாளர் கண.வரதராஜன், பிரதிச்செயலாளர் ஊடகவியலாளர் சா.நடனசபேசன், உறுப்பினர்களான யுதர்சன் ,கண்ணன ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது அமைப்பின் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பாக தெளிவுபடுத்தப்பட்டதுடன் நிதி நிலைமைகள் தொடர்பாக ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது
Post A Comment:
0 comments so far,add yours