அகில
இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட இளைஞர்களின் மாபெரும் எழுச்சி
மாநாடு "புதிய யுகம் நோக்கிய பயணம்" எனும் தொனிப் பொருளில் சாய்ந்தமருது
பௌசி மைதானத்தில் சனிக்கிழமை (24) இடம் பெற்றது.
அகில
இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட இளைஞர் அமைப்பாளரும் மயோன்
கல்வித் திட்ட, சமூக அமைப்பின் தலைவருமான றிஸ்லி முஸ்தபா தலைமையில்
இடம்பெற்ற இம் மாநாட்டில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்
முன்னாள் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான பாராளுமன்ற உறுப்பினர்
றிசாத் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான அமீர்
அலி கௌரவ அதிதியாகவும்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய கொள்கை
பரப்புச் செயலாளரும் அம்பாறை மாவட்ட செயற்குழு தலைவருமான அப்துல் ரசாக்
ஜவாத், கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளர் அஷ்ரப் தாஹீர், கட்சியின் சர்வதேச
விவகாரங்களுக்கான பணிப்பாளர் ஐ.எல்.எம். மாஹீர், கட்சியின்
பிரதிச்செயலாளர் நாயகம் அன்சில் அல் - அமீரி, முன்னாள் பிரதேச செயலாளர்
ஏ.எல்.எம்.சலீம்
முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார
அமைச்சர் எம்.எஸ்.சுபையிர் உட்பட கட்சியின் முக்கிய பிரமுகர்கள்
இளைஞர்,யுவதிகள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours