(சுமன்)
இளைஞர்களிடையே வாக்காளர்
வழிப்புணர்வை மேம்படுத்தலும், ஜனநாயகத்தை வளர்த்தலும் என்ற தொனிப்பொருளில்
Coalition for Inclusive Impact (CII) நிறுவனத்தின் ஏற்பாட்டில்
மட்டக்களப்பு மாவட்ட அரசியற் பிரமுகர்கள் மற்றும் இளைஞர்
யுவதிகளுக்கிடையிலான கலந்துரையாடலொன்று இன்றைய தினம் இடம்பெற்றது.
CII
நிறுவனத்தின் பிரதிநிதி சட்டத்தரணி கார்த்திகா ஆதித்தன் தலைமையில்
இடம்பெற்ற குறித்த நிகழ்வில் அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் அலிசாஹிர்
மௌலானா, இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாளேந்திரன், மட்டக்களப்பு
மாநகரசபையின் முன்னாள் முதல்வர் தியாகராஜா சரவணபவன், தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான கோவிந்தன் கருணாகரம் சார்பாக அவரின்
இணைப்பாளர் ஊடகவியலாளர் தேவஅதிரன் மற்றும் பேராசிரியர் சந்திரா மகேந்திரன்
உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
அரகலயின்
பின்னரான தற்போதைய அரசியல் சூழ்நிலையில் வாக்காளர்களுக்கும், அரசியற்
பிரதிநிதிகளுக்கும் இடையில் குறைந்து வரும் சமூக ஒப்பந்தத்தை நிவர்த்தி
செய்யும் முகமாக இக்கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டதுடன், இளைஞர்களிடையே
வாக்காளர் விழிப்புணர்வை மேம்படுத்தல், தேர்தல் முறைமையில் குறைவான
பிரதிநிதித்துவக் குழுக்களைச் சேர்ப்பதை வலுப்படுத்தல், தேர்தல்
சீர்திருத்தங்கள் மற்றும் கொள்ளைத் தெரிவுகள் பற்றிய புரிதலை அதிகரித்தல்,
ஒதுக்கப்பட்ட சமூகங்களின் கரிசனங்களைப் பிரதிபலிக்கும் வகையில் அரசியல்
அறிக்கைகளைத் தயாரிக்க ஊக்குவித்தல், மேலும் தகவலறிந்த மற்றும் உள்ளடக்கிய
ஜனநாயகத்தை வளர்த்தல் போன்ற விடயங்கள் தொடர்பில் இங்கு
கலந்துரையாடப்பட்டது.
Post A Comment:
0 comments so far,add yours