அறிவுச்சுடர் சிறுவர்வளர் கல்வி நிலையத்தின் ஏற்பாட்டில் சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட வேப்பையடி கலைமகள் மகா வித்தியாலயத்தில் ஆரம்பக்கல்வியில் இடர்படும் மாணவர்களுக்கான விஷேட செயற்றிட்டத்தின் ஆரம்ப நிகழ்வு புதன்கிழமை அதிபர் க.தியாகராசா தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அதிதியாக  அறிவுச்சுடர் சிறுவர்வளர் கல்விநிலையத்தின் பொறுப்பாளர் த.பாணுதேவன் மற்றும் பாடசாலையின் அபிவிருத்திச்சங்கத்தின்செயலாளர்.பழையமாணவர்சங்கத்தின்செயலாளர். ஆசிரியர்கள் .பெற்றோர்கள் எனப் பலர் கலந்துசிறப்பித்தனர்


இச்செயற்றிட்டத்திற்கான நிதியினை பிரதீசன் அருள்ராஜா அவர்கள் வழங்கியுள்ளதுடன் சிறுவர் நூலகத்திற்கான நூல்களை லண்டனில் வசிக்கும் கௌதம் அருள்சிவம் வழங்கிள்ளார். இவ் உதவியினைச் செய்த இருவருக்கும் இதற்கான ஒழுங்குகளைச் செய்துதந்த அறிவுச்சுடர் சிறுவர்வளர் கல்வி நிலை நிருவாகத்திற்கும்  பெற்றோர்கள் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளனர்.










Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours