அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தினால் காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் அனரத்தத்தினால் பாதிக்கப்பட்டவருக்கு நஷ்டஈடு காசோலை வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
காத்தான்குடி 167ஏ கிராம உத்தியோகத்தர் பிரிவில் வசிக்கும் வை.எல்.ஹசன் என்பவரது வீடு அண்மையில் ஏற்பட்ட சுழல் காற்றினால் சேதமடைந்திருந்தது.
இதற்கான நஷ்ட ஈட்டுத்தொகை ரூ.10000/= பெறுமதியான காசோலை கடந்த (02) திகதி காத்தான்குடி பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் அனர்த்த நிவாரண சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களான திருமதி
கே.குகந்தினி மற்றும் எம்.என்.நஜ்மி அஹமட் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours