மட்டக்களப்பு புதுக்குடியிருப்பில்
அழகாக அமைக்கப்பட்டுள்ள சுவாமி விவேகானந்த பூங்கா நாளை (25)
ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு திறந்து வைக்கப்படும்.
இராமகிருஷ்ண மிஷனை ஸ்தாபித்த வீரத்துறவி சுவாமி விவேகானந்தரின் 70 அடி உயர சிலை முதலில் திறந்து வைக்கப்படும்.
பின்னர்
முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகள் சேவையின் சின்னம் சுவாமி
நடராஜானந்தர் கர்மயோகி சுவாமி ஜீவனானந்த ஜீ ஆகியோரின் திருவுருவச் சிலைகள்
ஏக காலத்தில் சுவாமிகளால் திறந்து வைக்கப்படும்.
திறப்பு விழாவில் பிரதம அதிதியாக
தஞ்சாவூர் இராமகிருஷ்ண மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி விமூர்தானந்தஜி மஹராஜ் கலந்து சிறப்பிப்பார்கள்.
இந்
நிகழ்வு ஸ்தாபக தலைவர் க. சற்குணேஸ்வரன் தலைமையில், இலங்கைக்கான
இராமகிருஷ்ண மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மானந்த ஜீ மகராஜ்
முன்னிலையில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் ஸ்ரீமத் சுவாமி விமூர்தானந்தஜி மஹராஜ் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.முரளிதரன் ஆகியோர்
பிரதம அதிதிகளாக கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பிக்கவுள்ளார்.
மேலும்
இலங்கை இராமகிருஷ்ண மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மானந்த ஜீ
மகராஜ் ,கொழும்பு சுவாமி இராஜேஸ்வரானந்தா ஜீ மகராஜ்,மட்டக்களப்பு கல்லடி
ஆச்சிரம பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ், உதவி
பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி சுர்ச்சிதானந்த ஜீ மகராஜ், சுவாமி
மாத்ருசேவானந்தர் ஜீ மகராஜ் ஆகியோர் சிலைகளை திறந்து வைப்பார்கள்.
Post A Comment:
0 comments so far,add yours