( வி.ரி. சகாதேவராஜா)
வரலாற்று பிரசித்தி பெற்ற காரைதீவு வெருகலம்பதி ஒன்பது நாட்கள் பாதயாத்திரை நேற்றைய தினம் திங்கட்கிழமை ஆரம்பமாகியது.
ஆரம்ப வைபவம் காரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தில் திங்கட்கிழமை அதிகாலை 4 மணியளவில் இடம்பெறறது.
வரலாற்று
பிரசித்தி பெற்ற வெருகலம்பதி ஸ்ரீ சித்திர வேலாயுதர் சுவாமி ஆலய வருடாந்த
அலங்கார உற்சவம் 04 ஆம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
அதனையொட்டிய பாதயாத்திரை திங்கட்கிழமை ஆரம்பித்து ஒன்பது நாட்கள் பிரதான வீதியில் பயணித்து செப்.3 ஆம் தேதி வெருகலை சென்றடையும்.
ஆலய பிரதம குரு சிவ ஸ்ரீ சபா ஹோவர்த்தன சர்மா விசேட பூஜை நடாத்தி பிரதான வேலை கையளித்தார்.
முருக பக்தர் தங்கராஜா சந்திரமூர்த்தி பிரதான வேலை தாங்கி தலைமை வகிக்க அரோகரா கோஷம் முழங்க யாத்திரை ஆரம்பமாகியது.
மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர் கு.ஜெயராஜி பாதயாத்திரையின் முக்கியத்துவம் பற்றி உரை நிகழ்த்தினார்.
Post A Comment:
0 comments so far,add yours