(அஸ்ஹர் இப்றாஹிம்)



"சமூகங்களை கட்டியெழுப்புதல்" திட்டத்தின் கீழ் பிளஜ் டு டெஸ்டோ பெளண்டேசன் நிதி அனுசரணையுடன் ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் இணைப்பாக்கத்தில், சொந்த வீடுகள் இல்லாது வாழ்ந்து வந்த நான்கு குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகளை கையளிக்கும் நிகழ்வு திருகோணமலை மாவட்டத்தின் எல்லைக் கிராமமாகிய தென்னவன் மரபு அடி கிராமத்தில் இடம்பெற்றது.

 

திருகோணமலை நகரில் இருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள குறித்த கிராமத்தில் வசித்து வருகின்ற பொதுமக்கள் இடம்பெயர்ந்து மீளக் குடியமர்ந்த பின்னர்  போதுமான அடிப்படை வசதிகள்  இன்றி  தினமும் புறக்கணிக்கப்படும் நிலையில் தமது வாழ்க்கையை நடத்திவந்த நிலையில் அம் மக்களுக்கான உதவித்திட்டமாக இது அமைந்துள்ளது என்பது விசேட அம்சமாகும்.

 

 

இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் குணநாதன், பெளண்டேசனின்  ஸ்தாபகரும் தேசிய இயக்குனருமாகிய (அவுஸ்ரேலியா) த.உதயன் பத்மநாதன், ஜீவ ஊற்று அன்பின் கரங்கள் அமைப்பின் செயலாளர் .ஜே.ரி. பிரவின், மற்றும் திருகோணமலை மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளர் அத்தநாயக்க உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வீடுகளை பயனாளிகளுக்கு கையளித்தனர்.

 

மேலும் இதன்போது தென்னைவன் மரபு அடி கிராம உத்தியோகஸ்த்தர், அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர், கிராம அபிவிருத்தி சங்கம் உறுப்பினர்கள், மாதர் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், ஏனைய அமைப்புக்களைச் சார்ந்தவர்கள், குறித்த கிராமத்தினை சேர்ந்த பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்ததோடு

 

பாடசாலை மாணவர்களுக்கான பரிசுப் பொருட்களும் சிறப்பு விருந்தினர்களுக்கான நினைவுப் பரிசுகளும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டது.




  


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours