பாறுக் ஷிஹான்
நற்பிட்டிமுனை அல்-கரீம் பவுண்டேஷனின் பணிப்பாளர் சீ. எம். ஹலீம் தலைமையில் "ஓய்வு நிலை சாதனையாளர்கள் பாராட்டு நிகழ்வு" ஞாயிற்றுக்கிழமை(4) சவளக்கடை றோயல் கார்டனில் இடம் பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட இளைஞர் அமைப்பாளரும், மயோன் கல்வித்திட்ட மற்றும் சமூக அமைப்பின் தலைவருமான றிஸ்லி முஸ்தபா கலந்து கொண்டார்.
அதிதிகள் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டனர்.பின்னர் கிராஅத், வரவேற்புரை ,வரவேற்பு கீதம், பிரதம அதிதியினால் பள்ளிவாசலுக்கு மின் குமிழ் கையளிக்கப்பட்ட நிகழ்வு நடைபெற்றது.
இதன் போது நற்பிட்டிமுனை பிரதேசத்தில் உள்ள ஓய்வு நிலை சாதனையாளர்களுக்கு கௌரவமும் வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் கௌரவ அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்முனைத் தொகுதியின் அமைப்பாளரும் முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான சீ. எம். முபீத் மற்றும் அல் - கரீம் பவுண்டேஷனின் உறுப்பினர்களும் இன்னும் பல அதிதிகளும் கலந்து சிறப்பித்தனர்.
Post A Comment:
0 comments so far,add yours