பின்தங்கிய பிரதேசங்களுக்கு ஒருசில அரசியல் வாதிகள் தேர்தல் காலங்களில் வந்து மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பிரித்து கையகப்படுத்தி சென்றுவிடுவார்கள் அதற்குப்பின் அவர்களைக் காணமுடியாது இன்னுமொரு தேர்தல் வரும்போதுதான் அவர்களைக் காணமுடியும் என தமிழ்தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்

பட்டிருப்பு வலயக்கல்வி அலுவலகத்திற்குட்பட்ட மட்ஃபட்ஃகாந்திபுரம் கலைமகள் வித்தியாலயத்தில் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அவர்களது நிதிஒதுக்கீட்டின் கீழ் பாடசாலைக்கான போட்டோப்பிரதி இயந்திரம் கையளிக்கும் நிகழ்வு (05) ஆம் திகதி திங்கட்கிழமை பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

பாடசாலை அதிபர் சா.சத்தியசீலன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதமவிருந்தினராக கலந்துகொண்டு பேசுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார் 

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் வி.மதிமேனன்வலயக்கல்வி அலுவலக கல்வி மேம்பாட்டு உத்தியோகத்தர் சோ.பத்மராஜாஇஆசிரியர்கள்இகிராமமுன்னேற்றச்சங்கத்தினர்இபெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

அவர் மேலும் பேசுகையில் இப்பாடசாலை பாரிய வளப்பற்றாக்குறையுடையதாக இருக்கின்றது என்பது இப்போது எனக்கு நன்கு தெரிகின்றது. இந்நிகழ்வுக்குக்கூட இருப்பதற்கு கதிரைகள் இல்லை மாணவர்களது கதிரைகளில் இருக்கும் நிலை இருக்கின்றது இப்பாடசலையில் மாணவர்கள் குறைவாக இருக்கின்றனர் இவர்கள் கல்வியில் அதிக கரிசனை காட்டி பரீட்சையில் சித்தியடைகின்றனர் ஆனால் போதிய வளம் இல்லாமல் கஷ்டமானநிலையில் இருக்கின்றனர்.தேர்தல் காலத்தில் இப்பிரதேசத்திற்கு வருகைதரும் அரசியல் வாதிகளாக இருக்கலாம் அரசியல் கட்சியாக இருக்கட்டும் வாக்குகளைப் பெற்றபின்னர் கவனிப்பதும் இல்லை வளப்பற்றாக்குறைகள் தொடர்பாக திரும்பிப்பார்ப்பதும் இல்லை இவ்வாறான கட்சிகளுக்கு எதிர்வரும் தேர்தல் காலங்களில் தகுந்த பாடம் புகட்டவேண்டும் இப்பாடசாலையின் அதிபர் மற்றும் ஆசிரியர்களின் முயற்சியின் பயனாக பாடசாலை இவ்வளவு மிளிர்ச்சி கண்டுவருகின்ற அவர்களைப் பாராட்டுகின்றேன் என்றார்



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours