( வி.ரி. சகாதேவராஜா)
அகில
இலங்கை சிங்கள மொழி தின போட்டியின் சம்மாந்துறை வலய போட்டிக்கான
அங்குரார்ப்பண நிகழ்வு இன்று (5) திங்கட்கிழமை சம்மாந்துறை முஸ்லிம் மத்திய
கல்லூரியில் நடைபெற்றது.
வலய சிங்கள மொழி பாட வளவாளர் ஏ.எச்.நாஷிக் அகமட் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
பிரதான
அதிதிகளாக வலயக் கல்விப் பணிமனை சார்பில் உதவிக் கல்விப் பணிப்பாளர்
வி.ரி.சகாதேவராஜா மற்றும் சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலய
அதிபர் எம்.ரி.மொகமட் ஜனோபர் ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.
அம்பாறை மற்றும் ஏனைய வலயங்களில் இருந்து நடுவர்கள் கலந்து போட்டிகளுக்கு மத்தியஸ்தம் வகித்தார்கள்.தொடர்ந்து போட்டிகள் கிரமமாக நடைபெற்றன.
Post A Comment:
0 comments so far,add yours