( வி.ரி. சகாதேவராஜா)

மட்டு.மேற்குவலய மாணவர்களின் உளவள ஆற்றுகையை மேம்படுத்தும் செயற்திட்ட
பாடசாலை மாணவர்களின் உள வள ஆற்றுகையை வலுப்படுத்தும் மனோகரி  செயற்திட்டத்தின் கீழ் ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்கும் செயலமர்வு நேற்று முன்தினம் மட்டக்களப்பில் நடைபெற்றது.

யாழ் மருத்துவபீட வெளிநாட்டு பழைய மாணவர் சங்கத்தின் நிதி அனுசரணையில், மட்டக்களப்பு மாவட்ட உளநல பிரிவினரது ஒருங்கிணைப்பில், பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கேட்போர் கூடத்தில்  பணிப்பாளர் டாக்டர் இரா.முரளீஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய பாடசாலைகளில் உளவள ஆற்றுகை படுத்துத்தும் பணியினை மேற்கொள்ளும் ஆசிரியர்களை பயிற்சியளிக்கும் முகாமாக ஒழுங்கு செய்யப்படிருந்த இவ் பயிற்சி பட்டறைக்கு, 
மட்டக்களப்பு மாவட்ட உளநல ஒருங்கிணைப்பாளர்  டாக்டர். டான் சவுந்தரராஜா, வவுணதீவு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர். எஸ். ஏ. ஜோதிலெச்சுமி, உளநல சமூக சேவையாளர் .என்.நித்தியானந்தன் ஆகியோர் வளவாளர கலந்து கொண்ட பயிற்சி கருத்தரங்குக்கு மட்டக்களப்பு மேற்கு கல்விவலய திட்டமிடல் பிரதிப் பணிப்பாளர் வை. சஜீவன்  கலந்து கருத்துரை வழங்கியிருந்தார் .

அங்கு பணிப்பாளர் டாக்டர் இரா.முரளீஸ்வரன் மேலும் உரையாற்றுகையில்..

மாணவர்கள் பிரச்சனைகளை எதிர்கொள்ளுதல், வாழ்க்கையை திட்டமிடுதல், சரியான தீர்மானம் மேற்கொள்ளல்  போன்ற ஆற்றலை சிறுவயதில் இருந்துதே வளர்ப்பதன் மூலமே எதிர்கால சமூகத்தின் ஆரோக்கியத்தை உறுதி செய்ய முடியும்.  குறிப்பாக வாழ்நாள் முழுவதையும்  மகிழ்சிகரமாக்குவதற்கு, இளமைப் பருவ உளஆற்றுகை மிகமுக்கியமானதாகும்.என்றார்.


 இப்பயிற்சி நிகழ்வில் அவர் தொடர்ந்து பேசும்போது ..
எமது சமூகத்தில், பாடசாலை இடைவிலகல், பருவமடையும் முன் கர்ப்பம் தரித்தல், போதைப்பொருள் பாவனை, வகுப்புவாத மோதல்,  தற்கொலை போன்ற ஒழுக்க மாறான சமூக உருவாக்கத்தை இளைமை கால நல்வழிப்படுத்தலில்  மூலமே சீரமைக்கமுடியும். இதற்கான பெற்றோர்  பங்களிப்புக்கு சமாந்தரமாக  பாடசாலை ஆசிரியர்களது பங்களிப்பு அவசியம் என்றார்.

பாடசாலை மாணவர்களின் உள வலுபடுத்துத்தம் வளவாளர் குழு ஒன்றினை மேம்படுத்தலை நோக்காக கொண்டு பயிற்சி பட்டறைகள் தொடர்ச்சியாகஇடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.





Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours