"ஜனாதிபதித் தேர்தலையடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் ஒரு வருட காலத்துக்குள் புதிய அரசமைப்பைத் தயாரிக்கும் பொறுப்பை நான் நாடாளுமன்றத்துக்கு வழங்குவேன் என எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில்இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'ரணிலுடன் இலங்கைக்கு வெற்றிகரமான ஐந்து வருடங்கள்' என்ற தொனிப்பொருளில் தேர்தல் விஞ்ஞாபனம் நேற்றுமுன் தினம் வியாழக்கிழமை கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் வெளியிடப்பட்டுள்ளது.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours