( வி.ரி. சகாதேவராஜா)

 கிழக்கில் புகழ்பெற்ற கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியின் 125 ஆவது ஆண்டு நிறைவு விழாத் தொடர் எதிர்வரும் 13 இல் ஆரம்பமாகிறது.

இவ்வாறு நேற்று நடைபெற்ற ஊடக மாநாட்டில் அதிபர் அருட்சகோதரர் எஸ்.இ.ரெஜினோல்ட் தெரிவித்தார்.

கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் 125 ஆவது( jubilee ) ஆண்டு நிகழ்வுக்கான ஊடக சந்திப்பு  நேற்று ஞாயிற்றுக்கிழமை கல்லூரியில் இடம் பெற்றது.

பாடசாலையின் 125 ஆவது (jubilee ) ஆண்டு நிகழ்வுகள் தொடர்பாக  விழாக்குழுத் தலைவர் அதிபர் ரெஜினோல்ட் செயலாளர் எஸ்.சிறிரங்கன் ஆகியோர் விளக்கம் அளித்தனர்.

எதிர்வரும் 13.10.2024 125 ஆவது வருடம் ஆரம்பமாகி 13.10.2025 வரை ஒரு வருடம் 125 ஆவது jubilee ஆண்டாக பிரகடனப்படுத்தப்படுவதாகவும், ஒரு வருடத்தில் ஒவ்வொரு மாதமும் பல நிகழ்வுகள், செயற்றிட்டங்கள் இடம் பெறவுள்ளதாகவும் அதிபர் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்….
குறித்த நிகழ்வுகள் பாடசாலை கல்வி செயற்பாடுகளுக்கு இடையூறு இல்லாத வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

 எதிர் வரும் 13.10.2024 அன்று 125 ஆவது ஆண்டின் theme, theme பாடல், பாடசாலை வரலாறு மற்றும், நிகழ்வு விபரங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வெளியிடப்படும் எனவும் தெரிவித்தார்.

உபதலைவர் எஸ்.கோகுலராஜன் ஊடக மாநாடு தொடர்பாக விளக்கமளித்து இணைப்பாளராக செயற்பட்டார்.45 விழாக்குழுவினர் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours