( வி.ரி. சகாதேவராஜா)
 சம்மாந்துறை வலயத்துக்குட்பட்ட மல்லிகை இத்தீவு கிராம மாணவர்களுக்கு 23 துவிச்சக்கர வண்டிகள் அன்பளிப்பு செய்யப்பட்டன .

குறித்த வைபவம் மல்லிகைத்தீவு  அ.த.க.பாடசாலையின் அதிபர் எஸ்.ஜதீஸ்வரர தலைமையில் நேற்று நடைபெற்றது.

 இதன் போது அதிதிகளாக பிரதிக் கல்விப்  பணிப்பாளர் பி.பரமதயாளன், கோட்டக் கல்விப் பணிப்பாளர் எ.எல்.நாசிர் அலி, உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.ரி. சகாதேவராஜா, ஆகியோருடன்  முட்டைக்கோஸ் நண்பர்கள் வட்ட இணைப்பாளர் சமூக செயற்பாட்டாளர் பி. அனுசன், இலங்கையை 42 நாட்களில் சுற்றி வந்த எஸ்.கே முனாபிர் ஆகியோர் கலந்து  சிறப்பித்தார்கள் 

மல்லிகைத்தீவு கிராமத்தில் இருந்து மல்வத்தை விபுலானந்தா மத்திய கல்லூரிக்கு மூன்று கிலோ மீட்டர் தினமும் நடந்து சென்று வந்த 23 மாணவர்களுக்கு அவர்களின் தொடர் கல்வி வசதியை மேம்படுத்தும் பொருட்டு இந்த 23 துவிச் சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டன.

 முட்டைக்கோஸ் நண்பர்கள் அமைப்பும் youtube நண்பர்கள்   சுமார் 12 லட்சம் ரூபாய் செலவில் இவ் வண்டிகளை வழங்கி வைத்தனர்.

அதிதிகள் அனைவரும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.

நிகழ்வில் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

இதற்கு ஆரம்பத்தில் தொடர்பு கொண்ட மல்லிகைத்தீவு மாற்றுத்திறனாளி கே. அருந்தவராஜா வைபவத்தில் பாராட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது







Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours