(எம்.எஸ்.எம்.ஸாகிர்)


மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் தற்போது  நடைபெற்றுக் கொண்டிருக்கும் கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மாகாணமட்ட மெய்வல்லுனர் போட்டி-2024 இல் இன்று (11) செவ்வாய்க்கிழமை கல்முனை சாஹிராக் கல்லூரி மாணவன் ஜே.எம். ஆதிப் 16 வயது ஆண்கள் பிரிவில்  4X400 M அஞ்சலோட்ட  நிகழ்ச்சியில் தங்கப் பதக்கத்தைப் பெற்று சாதனையை நிலைநாட்டி, பாடசாலைக்குப் பெருமையைத்  தேடிக் கொடுத்துள்ளதோடு,  தேசியமட்ட போட்டிக்கும்  தெரிவாகியுள்ளார். 

இவ் வெற்றிக்காக உறுதுணையாய் இருந்து  மாணவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து ஆலோசனை மற்றும்  வழிகாட்டல்களையும் வழங்கி ஊக்கப்படுத்திய கல்லூரி அதிபர் எம்.ஐ. ஜாபிர் (SLEAS) மற்றும் பிரதி, உதவி அதிபர்கள், மாணவர்களை  வழிநடத்தி,  பயிற்சிகளை வழங்கிய பாடசாலை உடற்கல்வி ஆசிரியர் ஏ.எம்.அப்ராஜ் றிழா, விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்களான எம்.யூ.ஏ. சம்லி, ஏ.எம்.ஜப்ரான்  போட்டியில் பங்கேற்று தமது உச்ச திறமைகளை வெளிக்காட்டி, வெற்றி பெற்ற  மாணவனுக்கு  பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவிப்பதோடு, போட்டிகளில் பங்கேற்க தேவையான உதவிகளை மேற்கொண்ட பாடசாலை நிர்வாகம், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுகுழு (SDEC) மற்றும் பழைய மாணவர்களுக்கும் பாடசாலை சமூகம் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours