நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அநுர குமார திசாநாயக்கவை ஆதரித்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கல்முனை தொகுதியின்
வெற்றிக்கான மாபெரும் தேர்தல் பிரசார கூட்டம் (13) நாளை வெள்ளிக்கிழமை மாலை 06 மணிக்கு சாய்ந்தமருது மருதூர் சதுக்கத்தில் நடைபெறவுள்ளது.
"வளமான நாடு அழகான வாழ்க்கை" எனும் தொனிப்பொருளில், தோழர் அநுர குமார திசாநாயக்கவின்
கல்முனை தேர்தல் தொகுதி இணைப்பாளரும் தேசிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட செயற்குழு உறுப்பினருமான ஏ. ஆதம்பாவாவின் தலைமையில் இடம்பெறும் இம்மாபெரும் விழாவில், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அநுர குமார திசாநாயக்க பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளவுள்ளார்.
கௌரவ மற்றும் விசேட அதிதிகளாக கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொள்வர்.
இந்நிகழ்வில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு ஏற்பாட்டு குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
Post A Comment:
0 comments so far,add yours