(எம்.என்.எம்.அப்ராஸ்)
ரஹ்மத் மன்சூரினால் அம்பாரை மாவட்டம் ஒலுவில்,சம்மாந்துறை,நெயினாகாடு பிரதேசங்களில் நீர் இணைப்பு மற்றும் பொதுக்கிணறு திறந்து வைக்கப்பட்டது. ஒலுவில்,நெயினாகாடு,சம்மாந்துறை ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் தேவையுடைய பயனாளிகள் நீர் இணைப்பு மற்றும் பொதுக்கிணறு என்பனவற்றை அமைத்துத்தருமாறு கல்முனை ரஹ்மத் பவுண்டேசனிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
குறித்த கோரிக்கைக்கு அமைய வை.டப்ளியு.எம்.ஏ.
பேரவையின் ஒருங்கிணைப்பில்,ரஹ்மத் பவுண்டேசனினால் குறுகிய நாட்களுக்குள் நீர் இணைப்பு பொதுக்கிணறுகள் அமைக்கப்பட்ட நிலையில், ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளரும், கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வரும் ,கல்முனை ரஹ்மத் பவுண்டேசன் ஸ்தாபகருமான ரஹ்மத் மன்சூரினால் பொதுக்கிணறுகள் மற்றும் நீர் இணைப்பு என்பன பயனாளிகளுக்கு நேற்று(13)கையளிக்கப்பட்டு திறந்து வைத்தார்.
இதுஇதன்போது பயனாளிகள் பிரதேச முக்கியஸ்தர்கள், நலன்வி்ரும்பிகள், பவுண்டேசன் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours