பாறுக் ஷிஹான்


தமிழ் ஜனாதிபதி பொது வேட்பாளர் விடயத்தில் தமிழரசுக்கட்சியினர் செயற்பாடு  சங்கடங்களை தருகின்றது.

தமிழ் ஜனாதிபதி பொது வேட்பாளருக்கு வாக்களிப்பதன் ஊடாக தமிழ் மக்களின் எதிர்கால திட்டங்கள் சிறப்பாக செயற்படும் என காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் இலங்கை  தமிழரசுக் கட்சியின் காரைதீவு  முக்கியஸ்தருமான கிருஸ்ணபிள்ளை  ஜெயசிறில் தெரிவித்தார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் விசேட செய்தியாளர் சந்திப்பு அம்பாறை மாவட்டம் காரைதீவு பகுதியில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது

தமிழ் ஜனாதிபதி பொது வேட்பாளர் தொடர்பில் தமிழரசுக்கட்சியினர் இரண்டாக பிரிந்து நிற்பது வடகிழக்கு தமிழர்களுக்கு  சங்கடங்களை தருகின்றது.தமிழரசுக்கட்சி தலைமைகள் தளம்பல் நிலையில் இருந்தமையினால் உறுப்பினர்கள் பல்வேறு வேட்பாளர்களுக்கு ஆதரவளித்து வருகின்றார்கள்.இவ்வாறு பல உருவங்களாக பிரிவதற்கு தமிழரசுக் கட்சி தலைமைகள் விட்ட பிழையே காரணமாகும்.நாங்கள் இந்த அரசாங்கத்தில் எவரையும் நம்ப விரும்பவில்லை.இங்கு ஒரு இனப்பிரச்சினை இருக்கின்றது.எமது மக்கள் தெளிவாக இருக்கின்றார்கள்.எனவே  எதிர்வரும் தேர்தலில் எமது கோரிக்கையானது  சங்கு சின்னத்திற்கு வாக்களிப்பதும் எமது ஒற்றுமையை உலகிற்கு பறைசாற்றுவதுமாகும் என குறிப்பிட்டார்.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours