மாளிகைக்காடு செய்தியாளர்

ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாசவை ஆதரித்து பொத்துவில் தேர்தல் தொகுதியின் மாளிகைக்காடு பிரதேச கருத்தரங்கும், தேர்தல் காரியாலய திறப்பு விழாவும் முஸ்லிம் காங்கிரஸின் மாளிகைக்காடு அமைப்பாளரும், காரைதீவு பிரதேச சபை முன்னாள் உறுப்பினருமான எம்.எச்.எம். இஸ்மாயிலின் தலைமையில் நடைபெற்றது.


இந் நிகழ்வில் முன்னாள் இராஜாங்க அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவர் பைசால் காசிம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு தற்போதைய அரசியல் சூழ்நிலை சம்பந்தமான சிறப்புரை நிகழ்த்தினார்.

மேலும் இந்த கூட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சர்வதேச விவகார பணிப்பாளரும், கல்முனை மாநகர சபை முன்னாள் மேயருமான சிராஸ் மீராசாஹிப், பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களின் வெகுஜன மக்கள் தொடர்பாடல் செயலாளர் யூ.எல்.என். ஹுதா உமர், முஸ்லிம் காங்கிரஸின் மாளிகைக்காடு கிழக்கு தலைவர் எம்.எச். நாசர், முஸ்லிம் காங்கிரஸின் சாய்ந்தமருது அமைப்பாளரும், கல்முனை மாநகர சபை முன்னாள் பிரதி முதல்வருமான எம்.எச். பிர்தௌஸ் ஆகியோர் சமகால அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பில் உரையாற்றினர்.

இங்கு முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தேசிய அமைப்பாளரும், முன்னாள் கிழக்கு மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை, கட்சியின் உச்ச பீட  உறுப்பினரும் அம்பாறை மாவட்ட செயற்குழுவின் செயலாளருமான ஏ.சி.சமால்டீன், கல்முனை மாநகர சபை முன்னாள் பிரதி முதல்வர் ஏ.ஏ. வஸீர், முஸ்லிம் காங்கிரஸின் மாளிகைக்காடு மத்தி தலைவர் ஏ.எல். இம்தியாஸ் உட்பட முஸ்லிம் காங்கிரஸின் மத்தியகுழு உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours