இ.சுதாகரன்


பெரிய நீலாவணை காவேரி கல்விசார் அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் காவேரி விளையாட்டுக்கழகத்தின் அனுசரணையுடன் மாபெரும் விஞ்ஞான முகாம் கமு/பெரியநீலாவணை சரஸ்வதி வித்தியாலயத்தின் முதல்வர் இ.தவறாஜ் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டன.

விஞ்ஞான முகாமில் கல்முனை தமிழ்ப்பிரிவுக்கு பொறுப்பான கோட்டக்கல்விப் பணிப்பாளர் எஸ்.சஞ்ஜீவன் மற்றும் ஆரம்பப் பிரிவுக்குப் பொறுப்பான சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்.எஸ். சாந்தகுமார்,அண்மைப் பாடசாயின் அதிபர் ,காவேரி கல்விசார் அபிவிருத்தி ஒன்றியத்தின் பிரதிநிதிகள், ஆசிரியர்கள் மாணவர்கள் நலன் விருப்பிகள்,பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது விஞ்ஞான முகாமில் ஆரம்பப் பிரிவு மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுடன் தொடர்பான பல்வேறு விடயங்கள்  விளக்கங்களும் வழங்கி வைக்கப்பட்டன.குறிப்பாக தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயனுள்ள வகையில் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours