(எம்.எஸ்.எம்.ஸாகிர்)


சர்வதேச மனித உரிமைகள் பேரவையும் சர்வதேச பெளத்த சம்மேளனமும் இணைந்து, 'தேசிய கலை அரண்' அமைப்பின் ஏற்பாட்டில் "வாழும்போதே வாழ்த்துவோம்" என்ற தொனிப்பொருளில் தேசிய கலைஞர்களைக் கெளரவிக்கும் நிகழ்வு (16)  திங்கட்கிழமை   கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. 
 
இந்நிகழ்வில்  மாவடிப்பள்ளி மஜினா உமறு லெவ்வை சர்வதேச ரீதியில்  இலக்கியத்துறைக்கு  வழங்கி வரும் பங்களிப்புகளுக்காக    "கலைச் சுடர் லங்கா புத்ர தேசபந்து" எனும் கௌரவ விருதினை ஜனாதிபதியின் தொழிற்சங்க பணிப்பாளர் நாயகம் சமன் ரத்ன பிரிய வழங்கி கௌரவித்தார்.

சர்வதேச மனித உரிமை பேரவையின் தலைவர் பிரதீப் சார்லஸ் இவ்விழாவுக்கு சிறப்பு கௌரவ விருந்தினராகக் கலந்து கொண்டு விழாவுக்கான சர்வதேச பௌத்த சம்மேளனத்தையும் இணைத்து அனுசரணை வழங்கினார். 

இவ்விழாவை சுமார் 22 ஆண்டுகளுக்கு மேல் கலை மற்றும் சமூகப் பணிகள் ஆற்றிவரும் "கண்ணகி கலாலயம்" தமது ஐக்கிய சுயதொழில் வியாபாரிகள் சங்கம் கலையரண் இவர்களோடு தேசிய கலை அரண் ஒன்றிணைந்து ஏற்பாடுகளைச் செய்ததுடன்  இவ்வமைப்புகளின் தலைவர்  ஏ.கே. இளங்கோ மற்றும் உப தலைவர் ஏ. சுரேஷ்  அவர்களோடு குழுவினர்களும் இணைந்து இதன் திட்டத்தை சம்பந்தப்பட்டவர்களிடம் முன்வைத்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours