(அஸ்ஹர் இப்றாஹிம்)
மட்டக்களப்பு, காத்தான்குடி, காங்கேயனோடை அல் அக்ஸா மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் உயர்தர வகுப்பு மாணவ மாணவிகளுக்கான தலைமைத்துவப் பயிற்சிப் பட்டறை பாடசாலை பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.
பிரபல வளவாளரும் உளவளத் துணையாளருமாகிய மனூஸ் அபூபக்கர் அவர்களினால் மேற்படி தலைமைத்துவப் பயிற்சிப் பட்டறை நிகழ்த்தப்பட்டது.
மாணவத் தலைவர்களாக செயற்படும்போது எவ்வாறான தலைமைத்துவப் பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பது தொடர்பில் மிக விரிவாக கலந்துரையாடப்பட்டதோடு செயற்பாட்டு அடிப்படையில் தலைமைத்துவப் பண்புகளை வளர்ப்பதற்கான பயிற்சியும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours