!( வி.ரி. சகாதேவராஜா)



எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் தமிழர்கள் தரப்பிலே எந்த கட்சி பேதமும் இன்றி ஒரு அணியே போட்டியிட வேண்டும் என்ற கருத்து பரவலாக பேசப்பட்டு வருகின்றது. அது சமூக வலைத்தளங்களில் அனைவராலும் பதிவிடப்பட்டு வருகின்றது.

 அது ஏகோபித்த கருத்தாகவும் இருக்கின்றது

அம்பாறை மாவட்டத்திலுள்ள பிரதேசரீதியாக அதாவது பொத்துவில் திருக்கோவில் ஆலையடிவேம்பு காரைதீவு சம்மாந்துறை மற்றும் கல்முனை ஆகிய பிரதேசங்களில் மக்கள் மனங்களில் இடம்பிடித்த சேவை மனப்பான்மை உள்ள நபர்களை உள்ளடக்கிய ஒரு வேட்பு மனுவை எல்லோரும் சேர்ந்து தயாரித்து போட்டியிடுவது சிறந்தது இதில் கட்சி பேதங்கள் அனைத்தும் இல்லாமல் பொதுவாக களம் இறங்குவது சிறப்பாகும்.

அம்பாறை மாவட்டத்தை பொறுத்தவரை தற்போதைய கள நிலையில் கட்சி சார்பாக பொதுத் தேர்தல் களம் இறங்குவது மிகவும் பின்னடைவை ஏற்படுத்தும். ஏனெனில் எங்களது கட்சிக்குள்ளே பல்வேறு பட்ட பிரிவுகள்  காணப்படுவதுடன் ஏனைய கட்சிகளும் வெவ்வேறு சின்னங்களில் போட்டியிட்டால் எங்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லாமல் போய்விடும். எனவே அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்து பொதுவான ஒரு கட்டமைப்பின் கீழ் போட்டியிடுவது மிகவும் சாலச் சிறந்தது. எனவே அனைத்து அமைப்புகளையும் மிக விரைவாக ஒன்று கூட்டி ஒரு கட்டமைப்பை உருவாக்கி அனைத்து கட்சிகளும் பொது அமைப்புகளும் ஒன்றிணைந்த ஒரு கட்சியாக ஒரு சின்னத்தில் போட்டியிட்டு அது கூடிய வாக்குகளை பெற்று தற்பொழுது உள்ள அரசாங்கத்திலும் பங்காளியாக எமது பிரதேசத்திற்கான உரிமைகளை வென்றெடுக்க வேண்டியதுதான் தற்பொழுது உள்ள ஒரே வழி .

இதனை விடுத்து தனித்தனியாக பிரிந்து செல்வோமானால் எங்களை கடவுளால் கூட காப்பாற்ற முடியாது.

அம்பாறையில் கடந்த தேர்தலில் தமிழ்மக்கள் அன்னளவாக 75000 வாக்குகள் அளித்தும் பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டது.கருணா 30000
TNA.       25000
ஏனைய உதிரி கட்சிகள் பெரும்பான்மை கட்சிகளுக்கு 20000 வழங்கப்பட்டிருந்தது.

அம்பாறையில் பிரதிநிதித்துவம் பாதுகாக்க கட்சிகள் கொள்கைகளுக்கு அப்பால் ஒரு பொது உடன்படிக்கைகளில் காட்சிகளுக்கான செல்வாக்கின் அடிப்படையில் வேட்பாளர்கள் பங்கிடப்பட்டு பொதுவான சின்னத்தில் போட்டியிட வேண்டும்.

இதற்காக புத்திஜீவிகள் , சிவில் அமைப்புகள் ,சமய,சமூக நிறுவனங்கள் இளைஞ்ஞர்கள் ஒன்றுபட்டு பாடுபடவேண்டும் இவ்வாறு முயற்சித்தால் இரண்டு பிரதிநிதித்துவம் கிடைக்கவும் வாய்ப்பாக அமையும்.

வடக்கில் பெரும்பான்மை எப்படியோ தமிழரே எவ்வாறு வாக்குகள் சிதறினாலும் கிடைப்பது தமிழ் பிரதிநிதித்துவமே.

கிழக்கில் நிலமை வேறு அம்பாறை, திருகோணமலையில் கட்சி பேதங்கள் மறந்து ஒன்றுபட்டு பயனிக்கவேண்டியது காலத்தின் கட்டாயம்

எதிர்வரும் பொது தேர்தல் அம்பாறை மாவட்டத்து தமிழ் மக்களுக்கு சவால் மிக்கதாக இருக்க போகிறது.
 
இம்முறையும் பிரதிநிதித்துவத்தை இழக்க வேண்டி வருமா ? அதற்கு இடமளிக்க முடியாது.

ITAK 
TMVP
TNA (New)
EPDP
NPP ( 2 Tamil Candidate)
தேசிய கட்சிகள் சார்பில் இன்னும் பல தமிழ் வேட்பாளர்கள் தோற்றினால் 
அம்பாறை தமிழர் வாக்குகள் சிதறடிக்கப்படும்.

அண்ணளவாக 90 - ஒரு லட்சம் வரையான தமிழ் வாக்காளர்கள் அம்பாறை மாவட்டத்தில் உள்ளனர். 40,000 வாக்குகளுக்கு மேல் பெற்றால் தான் ஒரு ஆசனத்தை பெற முடியும். 

கடந்த முறை தமிழ் வாக்குகள் இரண்டாக பிரிந்தது, வர போகும் தேர்தலில் 3 ஆக, 4 ஆக பிரிந்து போக வாய்ப்பு உள்ளது. 

ஆகவே... வேட்பாளர் தெரிவில் கூடுதல் கவனம் செலுத்தி சரியான, தகுதியான, இளம் வேட்பாளர்கள் களமிறக்க பட வேண்டும். இல்லையேல் அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் அரசியல் அநாதையாக இருக்க வேண்டியது தான்

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours