( வி.ரி.சகாதேவராஜா)

காரைதீவில் "நமக்காக நாம்"   ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரனுக்கு இன்று (10) செவ்வாய்க்கிழமை பகல் பெரு வரவேற்பளிக்கப்பட்டது.

வரவேற்றபின்னர் காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடு இடம்பெற்றது.

தாயக செயலணியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளரும் இலங்கை தமிழரசுக்கட்சி கட்சியின் காரைதீவு பிரதேச தலைவருமான முன்னாள் தவிசாளர் கலாநிதி கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் மற்றும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் திருமதி சின்னையா ஜெயராணி உள்ளிட்ட இலங்கை தமிழ் அரசுக் கட்சி உறுப்பினர்கள் மற்றும் பொது வரவேற்பாளர்களும் வரவேற்றனர்.

நமக்காக நாம்" தமிழ் பொது வேட்பாளருக்காக கிராமங்கள் தோறும் நடைபெறுகின்ற தேர்தல் பரப்புரை செயற்பாட்டிலே நேற்று தமிழ் பொது வேட்பாளர் அறியநேத்திரன் கலந்து கொண்டார்.

அவருடன் முன்னாள் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மா நடராஜா உள்ளிட்டோரும் வருகை தந்திருந்தனர்.

தமிழ் மக்கள் பொதுச்சபையால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள்  சமூக நலன் விரும்பிகள், சமூக நல அமைப்புகளும் கைகோர்த்துக்கொண்டனர்.

அம்பாறை மாவட்ட தமிழ் மக்களின் பேரெழுச்சியை உலகறிய செய்வது இதன் நோக்கமாகும்.

பெரிய நீலாவணையில் ஆரம்பித்த பொது வேட்பாளருக்கான வரவேற்பு கல்முனை காரைதீவு நாவிதன்வெளி அக்கரைப்பற்று திருக்கோவில் பொத்துவில் வரை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours