( வி.ரி. சகாதேவராஜா)
கல்முனைக்
கல்வி மாவட்டமட்ட ஆங்கில தினப் போட்டி இன்று (18) புதன்கிழமை சம்மாந்துறை
அல்-மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.
சம்மாந்துறை
கல்வி வலயம் ஏற்பாடு செய்த மாவட்டமட்ட போட்டிகளின் அங்குரார்ப்பண
நிகழ்வில் பிரதம அதிதியாக சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் செபமாலை
மகேந்திரகுமார் கலந்து சிறப்பித்தார்.
சிறப்பு அதிதிகளாக பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான
திருமதி
நிலோபரா, பி. பரமதயாளன், எச் .நைரூஸ்கான்,எம்.சியாட், ஏ.பார்த்தீபன் ,
ஏ.றியாசா, எம்.நௌபர்டீன் , உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா,
மற்றும் ஆசிரிய ஆலோசகர்கள், வளவாளர்கள், ஆசிரியர்கள், அதிகாரிகள் கலந்து
கொண்டார்கள் .
கல்முனை,
சம்மாந்துறை, அக்கரைப்பற்று, திருக்கோவில் ஆகிய நான்கு வலயங்களைச் சேர்ந்த
மாணவர்கள் பங்கேற்ற நிகழ்வில் ஆங்கில பாட உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ
.நசீர் வரவேற்புரை நிகழ்த்த வளவாளர் கே.குணரத்ன விளக்க உரை நிகழ்த்தினார் .
Post A Comment:
0 comments so far,add yours