இலங்கையின் 8 மாகாணங்களுக்கான ஆளுநர்கள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்பாக இன்று பதவியேற்றனர்.
இலங்கையின் 9 மாகாணங்களில் சப்ரகமுவ மாகாணம் தவிர்ந்த ஏனைய 8 மாகாணங்களுக்கான ஆளுநர்களே இன்று பிற்பகல் 2 மணியளவில் பதவிப் பிரமாணம் செய்தனர்.
இவ்வாறு பதவியேற்ற 8 ஆளுநர்களும் அந்தந்த மாகாணங்களில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை தமது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
மத்திய மாகாண ஆளுநராக பேராதனை பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் சரத் அபேகோன் வடக்கு ஆளுநராக நாகலிங்கம் வேதநாயகம், , தென் மாகாண ஆளுநராக நிர்வாக சேவை சிரேஷ்ட அதிகாரி பந்துல ஹரிஸ்சந்திர, ஊவா மாகாண ஆளுநராக கபில ஜயசேகர, சப்ரகமுவ மாகாண ஆளுநராக சம்பா ஜானகி ஆகியோர் உள்ளிட்ட ஆளுநர்களே இன்றைய தினம் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.
Post A Comment:
0 comments so far,add yours