( வி.ரி.சகாதேவராஜா)
எதிர்வரும்
ஜனாதிபதி தேர்தலை ஒட்டிய ஐரோப்பிய யூனியன் தேர்தல் கண்காணிப்பு குழு
நாடளவிய ரீதியில் விஜயம் செய்து தேர்தல் முகவர்களை சந்தித்து வருகிறது.
அந்த வகையில் நேற்றுமுன்தினம் (6) வெள்ளிக்கிழமை கல்முனைக்கு விஜயம் செய்தது .
அங்கு
ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவின் இணைப்பாளரும் முன்னாள்
கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான மு. ராஜேஸ்வரனின் தேர்தல் அலுவலகத்திற்கு
விஜயம் செய்தார்கள்.
நேற்றுமுன்தினம் தான் அந்த தேர்தல் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.
அன்றைய தினமே ஐரோப்பிய யூனியன் குழுவினர் விஜயம் செய்து அம்பாறை மாவட்ட தமிழ் பிரதேச தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பாக கேட்டறிந்தனர்.
ஐரோப்பிய யூனியன் தேர்தல் கண்காணிப்பு குழு சார்பில் Cecilia keaveney
Oyvind seim ஆகியோர் தலைமையில் விஜயம் செய்தனர்.
Post A Comment:
0 comments so far,add yours