சா.நடனசபேசன்

சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட வேப்பையடி கலைமகள் மகாவித்தியாலயத்தில் (ஐ.ஓ.எம்) நிறுவனத்தின் உதவிமூலம்,இழப்பீடுகளுக்கான அலுவலகத்தினால் நடைமுறைப்படுத்தலுடன் 2 மில்லியன் செலவில் நிர்மானிக்கப்பட்ட மலசலகூடத்தினை மாணவர்களது பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வும் 1.4 மில்லியன் செலவில் போட்டோப்பிரதி மற்றும்  பாடசாலைக்கான உபகரணங்களும் கையளிக்கும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் கே. தியாகராஜா அவர்களின் ஒழுங்கமைப்பிலும் நாவிதன்வெளி பிரதேசசெயலாளர் திருமதி ராகுலநாயகி சஜிந்ரன் தலைமையில் 18 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்றது

இந்நிகழ்வில் வீதிகள், நெடுஞ்சாலைகள் அமைச்சின்மேலதிக செயலாளர் வேதநாயகம் ஜெகதீசன் சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் எஸ்.மகேந்திரகுமார் இழப்பீடுகளுக்கான அலுவலகத்தின் பணிப்பாளர் திருமதி அனுராதி பெரேரா சமூக ஒற்றுமை மற்றும் நல்லிணக்கப்பிரிவு புலம்பெயர்தலுக்கான சர்வதேச அமைப்பின் தலைவர் திருமதி கிரிஜா சிவகுமார் இழப்பீடுகளுக்கான உதவிப்பணிப்பாளர் அருன்பிரதீபன்  அம்பாரை மாவட்டசெயலகத்தின் இழப்பீடுகளுக்கான உத்தியோகத்தர் எம்.ஆர் ஆஸாத் ஆகியோர் கலந்துசிறப்பித்ததுடன் நன்றியுரையினை பாடசாலையின் அதிபர் கே.தியாகராசா நிகழ்த்தினார்

அதேவேளை பாடசாலைக்கான போட்டோக்கொப்பி இயந்திரம் உட்பட  1.4 மில்லியன் பெறுமதியான உபகரணங்களை பாடசாலை அதிபர் மற்றும் பெற்றோர்களிடம் ஒப்படைத்தமை குறிப்பிடத்தக்கது























Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours