( வி.ரி. சகாதேவராஜா)
அம்பாறை மாவட்டத்தில் இயற்கை வளங்களை பாதுகாக்கும் முகமாக 5000 பனம் விதைகளை நடும் திட்டம் இன்று (16) புதன்கிழமை பனங்காட்டில் முதற் கட்டமாக ஆரம்பமாகியது.

அம்பாறை மாவட்ட பெண்கள் வலையமைப்பின் ஏற்பாட்டில் இணைப்பாளர் திருமதி கலைவாணி தயாபரன் தலைமையில்  ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பனங்காடு தில்லையாற்று பகுதியில்  முதற் கட்டமாக 1200 பனம் விதைகள் இன்று நடப்பட்டன.

நிகழ்வில் அமைப்பின் இணைப்பாளர் திருமதி கலைவாணி தயாபரன், திட்ட இணைப்பாளர் திருமதி அனிதா செல்வகுமார், களப்பணியாளர் திருமதி நிஷாகரி பிரதீபன், ஆலையடிவேம்பு பிரதேச செயலக சுற்றுச் சூழல் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் யு. எல்  மஷ்மூதா, திருமதி  எஸ்.  ஜனனி, அபிவிருத்தி உத்தியோகர் திருமதி பிருந்தாயினி , பனங்காடு சிறு குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு நடுகை செய்து வைத்தனர்.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours