( வி.ரி. சகாதேவராஜா)

சம்மாந்துறை அல்- முனீர் வித்யாலயத்தில் முதல் முறையாக மொகமட் ஜஃவ்பர் பாத்திமா இவ்றத்  சிராஃபா என்ற மாணவி ஒன்பது பாடங்களிலும் 9 ஏ சித்தி பெற்று வரலாற்று சாதனை படைத்திருக்கின்றார்.

சம்மாந்துறை வலயத்துக்குட்பட்ட அல்முனீர் வித்தியாலயம் 1970களில்  ஆரம்பிக்கப்பட்டது.
எனினும் கடந்த வருடமே க.பொ.த. சாதாரண தர வகுப்பு ஆரம்பிக்கப்பட்டது. அந்த வகையில்  ஆரம்பிக்கப்பட்டு முதல் பரிட்சையிலே முதல் 9 ஏ சித்தி பெற்ற மாணவியாக பாத்திமா இஃப்ரத்
 சிறாஃபா விளங்குகிறார்.

அவரை  பாராட்டுகின்ற நிகழ்வு அதிபர் ஏ.அப்துல் ரஹீம் தலைமையில் நேற்று முன்தினம் பாடசாலையில் நடைபெற்றது.

நிகழ்வில் சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் செபமாலை மகேந்திரகுமாரின் வழிகாட்டலில் 
 பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான எம் .வை.யாசீர் அரபாத், எச்.நைரூஸ்கான் முன்னாள் கோட்டக் கல்விப்பணிப்பாளர் எம்.சபூர்த்தம்பி, முன்னாள் உதவிக் கல்விப் பணிப்பாளர் விபுலமாமணி வித்தகர் வி.ரி.சகாதேவராஜா மற்றும் ஆசிரிய ஆலோசகர்களான மௌலவி அஷ்ரப் பலாஹி , அகமட்லெவ்வை ,ரஷீத் ,சஜாத் உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்தனர்.

இச் சாதனை தொடர்பில் பாடசங அதிபர் ஏ. அப்துல் றஹீம் தகவல் தருகையில்..

எமது பாடசாலையில் சாதாரண தர வகுப்பு ஆரம்பிக்கப்பட்டு நடாத்தப்பட்ட முதலாவது சாதாரண தர பரீட்சையில் 65 மாணவர்கள் தோற்றினர். அவர்களில் 33 பேர் உயர்தரத்துக்கு தகுதி பெற்றிருக்கின்றார்கள். அவர்களுள் பாத்திமா இவ்றத் ஷிராஃபா 9 ஏ சித்தி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளார் . இவரது சாதனை எங்களுக்கு பெருமை சேர்த்து இருக்கிறது. இதற்காக ஒத்துழைத்த ஆசிரியர்கள் பெற்றோர்கள் கல்வி அதிகாரிகள் அனைவருக்கும் நன்றி செலுத்துகிறேன். என்றார்.





Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours